"இந்தியா தங்களின் முதன்மையான கூட்டாளி" - அமெரிக்க அரசு கருத்து

0 3351
"இந்தியா தங்களின் முதன்மையான கூட்டாளி" - அமெரிக்க அரசு கருத்து

ந்தியா தங்களின் முதன்மையான கூட்டாளி என அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் வெளியுறவு அமைச்சர்களின் உயர்நிலைக் குழுக் கூட்டம் இன்று காணொலியில் நடைபெறுகிறது. இந்தோ - பசிபிக் மண்டலத்தில் உள்ள சிக்கல்கள், அவற்றை எதிர்கொள்ளும் வழிமுறைகள், காலநிலை மாற்றம் ஆகியன குறித்து இந்தக் கூட்டத்தில் பேசப்படுகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சகச் செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, இந்தோ - பசிபிக் மண்டலத்தில் இந்தியா ஒரு முதன்மையான கூட்டாளி எனத் தெரிவித்தார்.

இந்தியாவுடன் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான ஒத்துழைப்பையும் உறவையும் அமெரிக்கா கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments